Sunday, August 25, 2013

வங்கி கொள்ளையர் கதையில் வாழ்க்கைத் தத்துவங்கள்.




தகுஸ்தான் என்ற நாட்டில் [தயவு பண்ணி உலக மேப்பில் இந்த நாட்டை தேடாதீங்க கிடைக்காது!!] ஒரு வங்கிக் கொள்ளை.  நாலு கொள்ளையர்கள் நவீன துப்பாக்கிகளுடன் வங்கிக்குள் நுழைந்தனர்.  வங்கி ஊழியர்களைப் பார்த்து கொள்ளையர் தலைவன் உரக்கச் சொன்னான்,

"யாரும் அசையக் கூடாது. நல்லா யோசிங்க, உங்க கல்லாப் பெட்டியில இருக்கும் பணம் நாட்டுக்குச் சொந்தமானது, உசுரு உங்களோடது,  எத காப்பத்திகனும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..........."  என்று பேசி நிறுத்தினான்.  உடனே அத்தனை பயல்களும் எதிர்ப்பேதும் தெரிவிக்காமல் தரையில் படுத்தனர்.  [இதற்க்கு பேருதான், பேசியே மனதை மாற்றும் யுக்தி.  வித்தியாசமா பேசி கேட்பவர்களை "மாத்தி யோசிக்க" வைத்தல்!!].

எல்லோரும் தரையில் கிடந்தாலும், ஒரு பெண் ஊழியர் மட்டும் 'ஒரு மாதிரியாக' ஏடாகூடமாக டேபிளின் மேல் படுத்திருந்தாள்.  அவளைப் பார்த்து, கொள்ளையடிக்க வந்தவர்களில் ஒருத்தன் கத்தினான், "கொஞ்சமாச்சும் நாகரீகமா நடந்துக்க, இங்க நாங்க அதுக்கு வரல.........."  [இதுக்கு பேர்தான் தொழில் சுத்தம்.  நாம வந்த வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமா இருக்கணும்!!  அதில இதிலன்னு கவனம் சிதறக்கூடாது!!] 


ஒரு வழியா கொள்ளையடிசிட்டு பணத்தையெல்லாம் மூட்டை கட்டிக்கிட்டு நால்வரும் வீடு வந்து சேர்த்தார்கள்.  அதில ஒருத்தன் பொடியன், தொழிலுக்கு புதுசு, MBA படிச்சிருக்கான்.  இன்னொருத்தன் அனுபவசாலி  ஆறாம் கிலாஸ் ஃ பெயில்.  பொடியன் கேட்டான்,

"அண்ணே எவ்வளவு அடிசிருக்கோம்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு, பணத்தை எண்ணலாமா?"

அதற்க்கு அவன் சொன்னான், "இதை எவன்டா கஷ்டப் பட்டு எண்ணிகிட்டு இருப்பான், கொஞ்சம் பொறு, கொஞ்ச நேரத்துல வங்கிக் கொள்ளைன்னு டிவில நியூஸ் வரும், எவ்வளவுன்னு அவனுங்களே சொல்லிடுவானுங்க, தெரிஞ்சுக்கலாம்" என்றான்.


[இதுக்கு பேருதாங்க அனுபவம்ங்கிறது!!  இந்த காலத்தில, வெறுமனே படிச்சிட்டு ஏட்டு சுரைக்காயாய்  இருப்பதை விட செயல் அனுபவம் இருப்பது முக்கியம்கிறது இதுல இருந்து தெரியுது தானே!!]

கொள்ளைக் காரர்கள் போனதும், வங்கி மேனேஜர் சூப்பர்வைசரிடம், "யோவ், போலீசுக்கு போனைப் போட்டு வரச் சொல்லுய்யா" என்றார்.


அதுக்கு சூப்பர்வைசர் சொன்னார், "கொஞ்சம் பொறுங்க சார், நாமும் ஒரு கோடியை எடுத்து வச்சுக்குவோம், இதுக்கு முன்னாடி ஏழு கோடி கணக்கை மாத்தி எழுதி அடிச்சோமுல்ல,  அதையும் சேர்த்து எல்லாம் திருட்டு போச்சுன்னு சொல்லிடுவோம்!!" என ஐடியா குடுத்தார். 

 [இதற்க்கு பேரு, "நீரோடும் திக்கில் நீயும் ஓடி, நெருக்கடியான சூழ்நிலையையும் உனக்கு சாதகமா பயன்படுத்திக் கொள்" என்ற வாழ்க்கைத் தத்துவம்.] 

"ஆஹா இது மாதிரி மாசம் ஒரு கொள்ளை நடந்தா எப்படி இருக்கும்!!   நாம் பண்ணும் அத்தனை ஃ பிராடையும் மறைச்சிடலாம்" [இதுதான் நம்ம சந்தோஷமே முக்கியம், வேலையெல்லாம் அப்பறம் தான்!! என்ற தத்துவம்!! ]

அடுத்த நாள்
TV செய்தியில், "பிரபல வங்கியில் கொள்ளை, 10 கோடி மாயம்" என அறிவிக்கப் பட்டது. 


இதைப் பார்த்து திகைத்த கொள்ளையர்கள் பணத்தை மீண்டும் மீண்டும் எண்ணினர். வெறும் இரண்டு கோடி மட்டுமே இருந்தது!! 

"என்னடா இது உசிரக் குடுத்து கொள்ளையடிச்ச நமக்கு வெறும் ரெண்டு கோடிதான், ஆனா அந்த பேன்க் மேனேஜர் விரல் சொடுக்குற நேரத்தில எட்டு கோடியை அடிச்சிட்டானேடா.............  சே!  இதுக்குத்தான் சொல்றது நாமும் நாலு எழுத்து படிக்கணும்னு!! திருடனா இருக்கிறத விட படிச்சவனா இருந்தா நிறைய அடிக்கலாம்" என்ற முடிவுக்கு வந்தனர்.  "Knowledge is worth as much as gold!"

பேன்க் மேனேஜரைப் பொறுத்தவரை, காணாமப் போன எல்லா பணத்துக்கும் கணக்கு காட்டியாச்சு!!  இதற்குப் பேர்தான், " ரிஸ்க் எடுப்பதை ர
ஸ்க் சாப்பிடுவதைப் போல நினைத்து வரும் சந்தர்ப்பத்தை சரியாப் பயன்படுத்திக்கோ" என்ற வாழ்க்கைத் தத்துவம்.
 
சார், உங்க பணத்தை எங்க இன்வெஸ்ட் பண்ணலாம்னு நாங்க ஆலோசனை தர்றோம், வாங்க சார்!!

அதுசரி, இதில யாருங்க நிஜமான திருடன்?!!

7 comments:

  1. யோவ் மாப்ளே,

    நீ டகுஸ்தான் நாட்டு ஆளுகளை விட எம காதகன் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ஒரு விடயத்தை சுட்டால்,எங்கிருந்து சுட்டென் என் சொல்ல வேண்டும்.

    இது "சொல்லாதே யாரும் கேட்டால் (1981)"என்னும் திரைப்படத்தின் கதை. ப்ரதாப் போத்தன் நாயகனாக நடித்த படம். 'கேட்டது கிடைத்தது கோடிக் கண்க்கில் என்னும் சங்கர் கனேஷ் இசையமைத்த பாடல் மிக அருமை
    இங்கே கேளும்!!

    http://youtu.be/qFaoKDlvh1c

    அடுத்து "ஹாதீம்தாயும் 7 கேள்விகளும்" படத்தின் கதை சுட்டு , டுபாக்கூர்ஸ்தான் நாட்டுக் கதையாக எழுத வேண்டுகோள்.

    உண்மையிலேயே நீர் அதி பயங்கர பதிவரப்பு
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் !!!!

    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாமு, நான் இன்னைக்குத்தான் படிச்சேன் [fACEBOOK] புதுசா இருக்கேன்னு போட்டேன்.............

      Delete
  2. சொல்லாதே யாரும் கேட்டால் (1981). நல்ல த்ரில்லர் படம். பல வருடங்களுக்கு முன்னாடி சன்மூவிஸ்ல பார்த்தது.

    …ஜெயதேவ்,

    ReplyDelete
  3. இந்த கதையை இப்பதான் புதுசா படிக்கிறேன். நல்லாருக்கு!

    ReplyDelete
  4. செயல் அனுபவம் இருப்பது முக்கியம்கிறது..................?!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete